வங்கதேசத்தில் இந்து அமைப்பு தலைவரை கைது செய்ததினை கண்டித்து தேனியில் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து எழுச்சி முன்னணியின் தேனி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் வங்கதேசத்தில் உள்ள, 'சம்மிலிதா சனாதனி ஜோதே' என்ற இந்து அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி. இவர் 'இஸ்கான்' எனப்படும் அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கத்தின் முன்னால்தலைவராக இருந்து வரும் நிலையில் வங்கதேச அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் , இவர் ஜனநாயக முறைப்படி போராடி வந்த நிலையில் இவரை கைது செய்ததை கண்டித்தும் எவ்வித நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த நிகழ்வில் தேனி மாவட்டத்தை சேர்ந்த இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி ,மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் ,மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் ,மாவட்ட செயலாளர்நாகர்கோவில் ராஜேஷ் மாவட்ட துணை தலைவர் சோலைராஜன்,
மாவட்ட துணை தலைவர் இளநீர் ரமேஷ் , மாவட்ட செயற்குழு பாண்டியா பிள்ளை ,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன் சேர்மக்கனி ,தேனி நகர தலைவர் சிவராமன் தேனி நகர பொதுச்செயலாளர்அரண்மனை முத்துராஜ், தேனி நகர அமைப்பாளர் கனகுபாண்டி ,தேனி நகர பொருளாளர் நாகராஜ் ,நகர துணைத் தலைவர்சிவா, நகர துணைத் தலைவர் ,நகரச் செயலாளர்கள் எல்.ஆர் புயல் ஐயப்பன் , அழகு பாண்டி நகரத் துணைச் செயலாளர்கள் சுரேஷ் , ராமநாதன் அரண்மனை ஜீவா ஆகியோர் உடன் இருந்தனர்.


