தேனியில் நில அளவை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கம் ஒன்றிப்பு தேனி மாவட்டம் சார்பில் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது . இந்த போராட்டத்தில் களப்பணியாளர்கள் செய்யும் அனைத்து விதமான பணிகளையும் கணக்கில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளவும் ,மனித திறனுக்கு ஏற்ற குறியீடுகளை வரையறுக்க வலியுறுத்தியும் உதவி இயக்குனர் கூடுதல் இயக்குனரின் பணிகளையும் கடமைகளையும் மண்டல துணை இயக்குனர் ,இணை இயக்குனர் (நிர்வாகம்) ,இயக்குனர் ஆகியோர்களுக்கு மாற்று நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் ,சிறப்பு திட்டங்களில் நிலம் எடுக்கும் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நில அளவர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்றும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து துறைகளிலும் அரசு ஆணை எண் 10 ஐ கடைபிடிக்கவும் ,
ஆய்வாளர் துணை ஆய்வாளர் ஊதிய முரண்பாடு கலைத்திட வேண்டும் என்றும், வரையறுக்கப்பட்ட அளவர் பதவியினை பெற்று தகுதியுள்ள நில அளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு தேனி மாவட்டம் மையம் சார்பாக தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .
தேனி மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் சேது ராஜா கோரிக்கை விளக்க உரையாற்றினார். வாழ்த்து உரையினை மாவட்ட துணை தலைவர் செல்வராஜ் நன்றி உரையினை மாவட்ட பொருளாளர் வைரமுத்து நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் தேனி மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்




