போடியில் மத்திய அமைச்சரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தேனி மாவட்டம் போடியில் உள்ள வள்ளுவர் சிலை முன்பு தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக மத்திய அமைச்சரை கண்டித்தும் ,பாஜக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் மத்திய அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் பற்றி தவறாக பேசியதாகவும் மத்திய அமைச்சர் பதவி இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .தேனி மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் முசாக் மந்திரி ,மாவட்ட துணை தலைவர் சன்னாசி , ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேலிட தேர்தல் பார்வையாளர் செல்வராஜ் பாண்டியன் ,சிலுவை தனுஷ்கோடி ,நகர பொதுச்செயலாளர் அரசு குமார் ,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முனியாண்டி, சின்னப்பாண்டி, எஸ் சி எஸ் டி மாவட்ட தலைவர் இனியவன்,மாநில செயலாளர் முத்துராம் ,முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் முகமது ராகுல் , மகிளா காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவி சிவகாமி, சுந்தரி, சரஸ்வதி, காந்தி ,ஏலம் கனகராஜ் ,காளிமுத்து மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் போடி நகர நிர்வாகிகள் பங்கேற்றனர் மேலும் தேனி நகர செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி உரை நிகழ்த்தினார்

